Posts

Showing posts from July, 2022
  புதிய வைரஸ் திரிபுகளால் இலங்கையில் சில மாதங்களில் நிலைமை மோசமாகுமென எச்சரிக்கை இந்தியாவில் புதிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு சில மாதங்களின் பின்னரே அங்கு பெரும் அவலநிலை ஏற்பட்டது. அதேபோன்று இலங்கையிலும் புதிய வைரஸ் திரிபுகள் இப்போதுதான் அடையாளம் காணப்படுவதால் இன்னும் சில மாதங்களில் பேரவல நிலைமை ஏற்படக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக் குழு உறுப்பினருமான வாசன் ரட்ணசிங்கம் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் இனம் காணப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. ஆனால், தொற்றாளர்கள் வீதம் இலங்கையில் அதிகரித்தே செல்கின்றது. உயிரிழப்பும் அதிகரித்துச் செல்கின்றது. இந்தக் காலகட்டத்தில் புதிய திரிபுகளும் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் டெல்டா வைரஸ் அவதானிக்கப்பட்டு 4 மாதங்களின் பின்னரே மோசமான நிலைமை அங்கு ஏற்பட்டது. பெருமளவானோர் உயிரிழந்தனர். இலங்கையிலும் டெல்டா வைரஸ் தற்...